இந்நோய் உஷ்ண வாயுவினால் உண்டாவது.அதிக உடலுறவாலும்,வெள்ளை நோய் முற்றினாலும்,தொப்புளுக்கு நேரே பின் முதுகெலும்பில் நாலு விரற்கடை (lumbar nerves,leg muscles, L -1 to L -5,) உள்ள எலும்பு தொகுதியில்,வரக்கூடிய தீராத வலி ஆகும்.
லிங்கம் ஒரே கட்டியாக இருக்கவேண்டும்.
மருதோன்றி இலையை சிறிய தேங்காய் அளவு அரைத்து அதனுள் லிங்கத்தை வைத்து சீலை செய்து 10 விரட்டியில் புடமிடவும்.பின் லிங்கத்தை மட்டும் எடுத்து மறுபடியும் முன்போல் அதே போல் மறு புடம் இரண்டாவது போட்டு லிங்கத்தை மட்டும் எடுக்கவும்.
ஒரு கரண்டியில் வேப்ப எண்ணெய் விட்டு அதில் லிங்க கட்டியை வைத்து நெருப்பில் வைத்து எண்ணெய் நெருப்பு பிடிக்கும் வரை வைத்து எண்ணெய் பூராவும் எறிந்த பிறகு லிங்கத்தை எடுத்து கொள்ளவும்.இது எடை குறையாது.
லிங்கத்தை கல்வத்தில் பட்டு போல் அரைத்து கொள்ளவும்.பிறகு சுத்தி செய்த நேர்வாளம் 15 கிராம்,சங்கன் இலை 35 கிராம்.இந்த இரண்டுடன் லிங்க செந்தூரம் சேர்த்து நைய அரைத்து வில்லையாக செய்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு ஓடு வைத்து இந்த வில்லை வைத்து பிறட்டி பிறட்டி கொடுக்கவும்.ஈரம் வற்றும்வரை செய்யவும்.வில்லை சிறியதாகும்.எடுத்து அரைத்து பொடிசெய்து புட்டியில் அடைக்கவும்.
அளவு :
குன்றி அளவு பனை வெல்லத்தில் (கருப்பட்டி )சாப்பிட்டு காபி சாப்பிடவும்.இடுப்பு பிடிப்பு ஒரு மணி நேரத்தில் குணமாகும்.சுரத்திற்கும் கொடுக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.




